விடுகதை - விடை தேடும் பயணம் | 02/20/2021

விடுகதை - விடை தேடும் பயணம் | 02/20/2021

Americantamilradio | 3 days ago

Share On Twitter

விடுகதை - விடை தேடும் பயணம்

அறம் செய்ய விரும்பு என்ற தலைப்பில் திண்ணை அறவாரியத்துடன் ஒரு பயணம்.

தமிழகத்தில், திண்ணை அறவாரியம் அரசு அனுமதி பெற்ற ஒரு லாப நோக்கமற்ற தொண்டு நிறுவனம் [NGO Organization].

கடலூர் மாவட்டம் ,குறிஞ்சிப்பாடி வட்டம், கன்னித் தமிழ் நாடு என்னும் கிராமத்தில் தொடங்கப்பட்டு இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் திண்ணை அறவாரியத்தின் தன்னார்வலர்கள் மூலம் அரசு பள்ளிகளில் பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தொண்டு புரிந்து வருகிறது.

1.தொடக்கக் கல்வியை தொடர முடியாமல் இடைநிறுத்தம் செய்யப்பட்ட மாணவர்களுக்கு திண்ணை - சமம் இரவு பாடசாலையுடன் கைகோர்த்து உதவி செய்து வருகிறது.

2.வறுமையில் வாடும் சமூகத்தில், பின்தங்கிய குடும்பத்தின் முதலாம் பட்டதாரிகளுக்கு உயர்கல்விக்கான உதவியை செய்து கொண்டு வருகிறது.

3.கிராமப்புற மகளிர் மற்றும் முதியோர்களுக்கான நலத்திட்ட உதவியை செய்து கொண்டு வருகிறது.

4.ஆதரவற்றோர் மற்றும் பசித்தவருக்கு உணவு வழங்கிக் கொண்டு வருகிறது.

5.முதியோர்கள்,மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான உதவியை செய்து கொண்டு வருகிறது.

கரும்பலகை - 2021 - அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நிதி திரட்டும் நிகழ்வு

நன்கொடைகள் அளித்திட

www.tfoundationindia.com/donate

Share On Twitter

Watch On youtube.com